
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக பொது செயலாளர் சசிகலா, மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அலுவலகத்தில்இருந்து வெளியே வந்த சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல், மாடியில் இருந்து தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்து, இரட்டை இலை சின்னத்தை காட்டினார். பின்னர், அவர் வெளியே வந்த அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உடன் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர் பெஞ்சமீன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.