
ஜெ. அண்ணா மகள் தீபா முதன் முறையாக பெரும் கூட்டத்தோடு வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது ஆயிரக்கணக்கான தீபா ஆதரவாளர்கள் அவருடன் வந்தனர்.
கூட்டம் அதிகமாக கூடி விட்டதால் குஷியாகி விட்டனர் தீபா ஆதரவாளர்கள்.
சொல்லத்தான் வேண்டுமா? சிலிர்த்து கொண்ட சில ஆதரவாளர்கள், இவ்வளவு கூட்டம் கூடிய தங்கள் தலைவிக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்க வில்லை என புதிய பிரச்னையை கிளப்பினர்.
ஒருவர் கிளப்பி விட்ட இந்த பிரச்சனை தீ போல பரவியது.
பின்னர் கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஆர் சமாதி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் சமாதானம் பேசியும் ஒன்றும் எடுபடவில்லை
கூட்டம் கட்டுக்கடங்காமல் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
போதாத குறைக்கு மறுபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் வரும் நேரம் தள்ளிபோய் கொண்டிருக்கிறது.
பச்சை நிற உடையணிந்து வந்த தீபாவை சுற்றி ஆதரவாளர்கள் பட்டாளம் காவலுக்கு நின்று அழைத்து வந்தனர்.மிகப்பெரிய தலைவர்களை போன்று பூக்களை தூவி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
கடற்கரை சாலையில் தீபா ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1000க்கணக்கான தொண்டர்களுடன் தீபா வருவது போலீசாருக்கு நன்றாக தெரியும். ஆனால் ஏன் ஒரு 10 போலீசார் கூட பாதுகாப்புக்கு வரவில்லை என்று குமுறுகிறார்கள் தீபாவின் தொண்டர்கள்.
தீபா ஆதரவாளர்களின் இந்த போரட்டத்தால் கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல போக்குவரத்து பாதிக்கபட்டது.