12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! மேட்டூர் டேம் தத்தளிக்கிறது...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2019, 11:33 AM IST
Highlights

குறிப்பாக சேலம், கரூர்,  ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கடலூர்,  உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு பாதுகாப்பு சம்மந்தமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
மேட்டூர்  அணையில் நீர் மட்டம் சுமார்  120  அடியை எட்டி உள்ளதால்  அணையை  சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஏற்கனவே  சில மாதங்களுக்கு  முன்பு கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணை 75 சதவீதம் நிரம்பி இருந்தது இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு  பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.  இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உள்ளது.  தற்போது அணையில் இருந்து 850 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் ஆணை வேகமாக நிரம்பி வருகிறது.  நேற்று வரை அணையின்  நீர்மட்டம் 118.  60 அடியாக இருந்த நிலையில் அது தற்போது 120 அடியை எட்டியுள்ளது.  இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது,  அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது, இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, 

click me!