கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published May 10, 2022, 1:46 PM IST
Highlights

இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, துப்பாக்கி சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை இது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் புதிய முதலீடுகள் அதிகம் தமிழகத்திற்கு வருகிறது. 

காவல்துறை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் கம்பீரமான துறையாக மாறியுள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

காவல் துறை மானியக் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் நேற்றும், இன்றும் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது;- இந்த ஆட்சியில் வன்முறைகள் இல்லை, சாதி சண்டைகள் இல்லை, மத மோதல்கள் இல்லை, துப்பாக்கி சூடுகள் இல்லை, அராஜகங்கள் இல்லை இது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் புதிய முதலீடுகள் அதிகம் தமிழகத்திற்கு வருகிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் மிக பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. தீவிரவாத செயல்களை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். தற்போது வன்முறை பயிற்சிகள் இணையதளத்தில் அதிகரித்து வருகிறது. கள்ளச் சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகத்தில் மாற வேண்டும். அதனை உறுதிப் படுத்துங்கள் இது போன்ற பல்வேறு கட்டளைகளை தமிழ்நாடு காவல் துறைக்கு நான் வழங்கியுள்ளேன்.

இனி லாக்கப் குற்றம் நடைபெறாது

காவல் துறையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.  மக்களுக்கு காவல்துறை மீது தனி நம்பிக்கை ஏற்பட ஐந்து அம்சங்கள் கொண்ட கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் நோக்கம் குற்றங்களை தடுப்பதே அந்த நடவடிக்கை ஒன்று காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இது நம்ம போலீஸ் என்ற உணர்வை பட்டி தொட்டி உள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளோம். குற்றங்களைத் தடுக்கும் தவிர்ப்போம் என்பது இந்த அரசின் முழக்கம் உள்ளது. இனிவரும் நாட்களில் லாக்கப் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

பாலியல் குற்றங்கள் 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்சோ சட்டத்தின் கீழ் 2021 மே மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரை 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரதட்சணை கொடுமை பாலியல் குற்றங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் காவல்துறையினரிடம் பெண்கள் புகார் அளித்து வருகின்றனர்.

போதைப்பொருள் விற்பனை

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஹான்ஸ் கஞ்சா போன்ற பொருட்களின் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகமாக கஞ்சா போன்ற பொருட்கள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்புக்காவல் சட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று தொழிலுக்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கூலிப்படை

பள்ளி கல்லூரி வளாகங்களில் குட்கா விற்பனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் இந்த துறைக்கு நான் பொறுப்பேற்ற பிறகு வழங்கிய முதல் உத்தரவிட்டுள்ளேன். மத மோதல்களை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நிதிநிலை அறிக்கை என்பது காவல்துறைக்கு அறிவிக்கப்பட்ட 44 அறிவிப்பில் 39 அறிவிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எத்தனை சக்திகள் முயன்றாலும் ஜாதி, மத மோதல் இன்றி சமூக நல்லிணக்க தோட்டமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மத மோதல்களை ஏற்படுத்த யார் முயன்றாலும்கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இனிமேலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.  கூலிப்படைகளின் அட்டகாசத்திற்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூலிப்படைகள் விரைவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

click me!