பன்னீர் செல்வம் கண்ணீர் செல்வமாக மாறிவிட்டார்..! இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.. ராஜன் செல்லப்பா அதிரடி

By Ajmal Khan  |  First Published Jun 27, 2022, 2:49 PM IST

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக இனி ஓபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லையென்றும் தென்மாவட்டத்தில் ஓ.பி.எஸுக்கு ஆதரவு இருப்பது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார். 


சுயநலத்தோடு ஓபிஎஸ் செயல்படுகிறார்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. இதன் காரணமாக அடிமட்ட தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தனக்கு தான் தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ள இநலையில், 95% நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக மீண்டும் பிளவு படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரையில் செய்திளார்களை சந்தித்த  திருப்பரங்குன்றம்  எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஒரு வலிமையான திறமையான தலைமை உருவாக்கப்பட்டு, வருகின்ற ஜூலை 11 தேதி ஒற்றைத் தலைவராக பொறுப்பேற்கும் சூழல் உள்ளதாக தெரிவித்தார்.  திமுகவிற்கு சாதகமாக  சிந்துபாடுபவர்கள் அதிமுக தலைமை பதவியை ஏற்க தகுதியற்றவர்கள். நேற்று ஓ.பி எஸ் மதுரை முதல் தேனி வரையில் மேற்கொண்ட பயணம் வெற்றிப் பயணமாக கருத முடியாது. ஓ.பி.எஸ் சுய நலத்துடன்  செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில்   ஓ.பி.எஸ் தனது தொகுதி தவிர மற்ற எந்த கட்சியினருக்கும் தேர்தல் பிரச்சாரம்  செய்யவில்லை இல்லை.

Tap to resize

Latest Videos

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..! கட்டிட கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்

ஓபிஎஸ் ஆதரவு - மாயத்தோற்றம்

தென் மாவட்டத்தில் ஓ.பி எஸ்க்கு ஆதரவு இருப்பதாக மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஜெயலலிதா ஓ.பி.எஸ் ஐ உண்மை தொண்டன் என்று பாராட்டியதாக கூறியுள்ளார் ஆனால் ஜெயலலிதா மேடையில் பாராட்டினால் சில காரணம் இருக்கும் என தெரிவித்தார். அதிமுகவின் 95% கட்சித் தொண்டர்கள், தலைமை குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள்  இ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.  ஓ.பி.எஸ் ஜானகி அம்மா போன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டுக் கொடுக்க வெண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில்  இ.பி எஸ் 93 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றார், ஓ.பி எஸ் வெறும் 10 ஆயிரம் வாக்குகளை  மட்டுமே பெற்றுள்ளார், பன்னீர்செல்வம் தற்போது கண்ணீர்  செல்வமாக மாறி இருப்பதாக தெரிவித்தவர், பன்னீர்செல்வத்திற்கு கட்சியின் பொதுக் குழு கூட்டதில் எந்த அவமரியாதையும் செய்யப்படவில்லை என கூறினார்.  பொதுக் குழுவை நடக்ககூடாது என்று நினைப்பவர் எப்படி கட்சித் தலைவராக வர முடியும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் நீதிமன்றம் செல்லலாம் ஆனால் தலைவராக வர வேண்டுமென நினைப்பவர் எப்படி செல்வார் என கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம்..! திமுகவை புகழ்வது கட்சிக்கு செய்யும் துரோகம்..! ஜெயக்குமார் காட்டம்

இனி பேச்சு வார்த்தை இல்லை

 தென்மாவட்டத்தில்  ஓ.பி எஸ் மட்டும் அதிமுகவின் தலைவர் இல்லை.  திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பெரிய புல்லான் உள்ளிட்ட பல்வேறு தலைவர் இருப்பதாக தெரிவித்தார். என்வென்று தெரியாமல் பல கோப்பில் கையெழுத்து போட்டதாக சொல்லும்  ஓ.பி. எஸ் எப்படி  முதல்வராக இருந்தார், எப்படி ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். வினை விதைத்தவன் வினை அறுப்பன் கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான், அவர் எடுத்த ஆயுதம் அவரை வீழ்த்தி உள்ளதாக கூறினார். யார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்? கட்சியை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முடியாதவர் எப்படி ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்  ஒருங்கிணைப்பு, தகுதி, திறமையற்றவராக  ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து  இனி ஓ.பி.எஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை இல்லை. அது கட்சியின் வேகத்துக்கு வேகத்தடையாகிற்ந்து. பேசினாலும் கட்சியில் பதவி பெறும் விஷயங்களை பற்றிதான்  பேசுவார்கள்.
 

இதையும் படியுங்கள்

முன்னாள் அமைச்சரின் முறைகேட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒத்துழைப்பு.? நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?-மநீம

click me!