தூதுவனாக செல்ல நான் தயார்.. உங்க மாமா ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா? அண்ணாமலை கேள்வி..!

By vinoth kumarFirst Published Aug 1, 2021, 11:02 AM IST
Highlights

கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T-20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்... மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.

கர்நாடக அணை பிரச்சினையை தீர்க்க மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என எம்.பி தயாநிதி மாறன் பேசியதற்கு பாஜக அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழகம் கர்நாடகா இடையே காவிரி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை தொடர்பாக கடிதங்கள் வாயிலாகவும், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்நிலையில், கர்நாடகாவில் புதிய முதல்வராக பதவியேற்றதுமே காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என உறுதியாகத் தெரிவித்தார். கர்நாடக முதல்வரின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாதுவில் அணைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம். தமிழக பாஜக சார்பில், ஆகஸ்ட் 5ம் தேதி தஞ்சாவூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை  மேககாது அணையை நாங்கள் கட்டியே தீருவோம். மேகதாது அணை திட்டம் கர்நாடகாவின் உரிமை. அதனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம். அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் குறித்து எனக்கு கவலை இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என கூறியுள்ளார். 

இதனால், கர்நாடகா மற்றும் தமிழக பாஜகவினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் கர்நாடக முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என கிண்டலாக கூறினார். இந்நிலையில், திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T-20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்... மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.

தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru அனுமதிப்பாரா?

— K.Annamalai (@annamalai_k)

 

தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா திரு. மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!