சிக்கன், மட்டன், மீனைவிட மாட்டிறைச்சியை நிறைய சாப்பிடுங்க... பொதுமக்களுக்கு பரிந்துரை செய்யும் பாஜக அமைச்சர்.!

Published : Jul 31, 2021, 10:06 PM ISTUpdated : Jul 31, 2021, 10:08 PM IST
சிக்கன், மட்டன், மீனைவிட மாட்டிறைச்சியை நிறைய சாப்பிடுங்க... பொதுமக்களுக்கு பரிந்துரை செய்யும் பாஜக அமைச்சர்.!

சுருக்கம்

கோழி, ஆடு, மீனை விட மக்கள் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன் மேகாலயா பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் தெரிவித்துள்ளார்.  

மேகாலயாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கால்நடை துறைக்கு புதிய அமைச்சராக சன்போர் சுலாய் என்பவர் பொறுப்பேற்றார். மாட்டை வைத்து பாஜக அரசியல் செய்வதாக பொதுவெளியில் கருத்துகள் உண்டு. குறிப்பாக வட இந்தியாவில் மாட்டிறைச்சி விவகாரத்தில் கும்பல் தாக்குதல்களும் நடந்தேறியிருக்கின்றன. மக்களின் உணவு சுதந்திரத்தில் சங்பரிவார் மற்றும் பாஜக தலையிடுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில்  பாஜக மாட்டிறைச்சிக்கு எதிரான கட்சி என்ற என்ற பிம்பம் உள்ளதால், அதை உடைக்கும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிடுங்கள் என்று பாஜக அமைச்சர் சன்போர் சுலாய் பேசியிருக்கிறார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோழி, ஆடு, மீனை விட மக்கள் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன். மக்களை அதிக மாட்டிறைச்சி சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம், பசு வதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் இதுதொடர்பாகப் பேச இருக்கிறேன். அண்டை மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய பசு சட்டத்தால் மேகாலயாவுக்கு கால்நடை போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்.
மேகாலயா, அஸ்ஸாம் மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை உள்ளது. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் மேகாலயா அரசு பாதுகாக்கும்” என்று சன்போர் சுலாய் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி