கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை.. அதிர்ச்சி தகவல் கொடுத்த முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 28, 2020, 5:34 PM IST
Highlights

என்னைப் பற்றியும், அரசைப் பற்றியும் குறை கூறி அறிக்கை விடுவது தான் ஸ்டாலினின் வேலை என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

என்னைப் பற்றியும், அரசைப் பற்றியும் குறை கூறி அறிக்கை விடுவது தான் ஸ்டாலினின் வேலை என்று முதல்வர் எடப்பாடி  பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

சேலத்தில் 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. நாளை நடைபெறும் மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு பின்னர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும்  என்றும் தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து மக்களை காக்க அரசு இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று நிபுணர்களாலேயே கணிக்க முடியவில்லை. 

கொரோனா தொற்று புதிய நோயாக இருக்கின்ற காரணத்தால் இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவால் திணறிக் கொண்டிருக்கின்றன. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 

மேலும், பேசிய அவர் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க நானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் நிற்கிறோம்.  நோய்ப்பரவல் தடுப்பு, குணப்படுத்துவது பற்றி மு.க.ஸ்டாலின் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? 'என்னைப் பற்றியும், அரசைப் பற்றியும் குறை கூறி அறிக்கை விடுவது தான் ஸ்டாலினின் வேலை என்று முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். 

click me!