சாத்தான்குளம் விவகாரத்தை கையில் எடுத்த எடப்பாடி... ஒரே அறிவிப்பில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 28, 2020, 5:04 PM IST
Highlights

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை நடத்தியதாக போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதனையடுத்து, அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், கனிமொழி மற்றும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில்  கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா அமையும் இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்திருக்கும்போது உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

click me!