தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இன்று முதல் திறப்பு.. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அதிரடி நடவடிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2021, 10:45 AM IST
Highlights

இந்நிலையில் தற்போது கொரனோ பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறந்திட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கான கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் பணிகள் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரொனா 2வது அலை பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலக தமிழகத்தில் மூடப்பட்ட மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்திட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் கொரொனா 2வது அலை பரவலில் நோய் பாதிப்பை கட்டுப்படுத்திட கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே மட்டும் கற்றல் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் தற்போது கொரனோ பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறந்திட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இன்று முதல் இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகளை படித்து வரும் மாணவர்களுக்கான கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் பணிகள் நேரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி மருத்துவ கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன. 

கல்லூரிக்கு வரும் மாணவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரனோ பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்துவது , விடுதிகளில் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாணவர்களுக்கு தனி அறையை ஒதுக்கீடு செய்வது , குழுவாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து பார்சல் முறையில் மாணவர்களுக்கு உணவுகளை வழங்குவது , விடுதிகளில் பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகைக்கு தடை உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

 

click me!