இந்துத்துவா பிரச்சாரம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! கொந்தளிக்கும் வைகோ - பின்னணி என்ன ?

By Raghupati R  |  First Published Oct 29, 2022, 10:08 PM IST

சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடை இலக்கியம் என்கிறார். திருக்குறள் பற்றி சொல்கிறார். சனாதனவாதியா மாறி, இந்துத்துவா பிரச்சார காரராக மாறிவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.


மதிமுக பொதுச்செயலாளரும், எம்பியுமான வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை இன்று வந்தடைந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ‘உலகத்தில் பல்வேறு நாடுகளில் குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. துல்லிய அறிவும், கண்டுபிடிப்பும் கொண்டிருக்ககூடிய நாடுகளில் நடைபெறுகிறது என்றால் அங்கே உளவுத்துறை கெட்டுவிட்டது, கடமை தவறிவிட்டது. என்று சொல்லமுடியுமா ?

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

முதலமைச்சர் உடனடியாக மின்னல் வேகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் கோவைக்கு அனுப்பி அடையாளம் தெரியாமல் கருகி இருந்த உடலை வைத்து இவர் தான் சம்பத்தப்பட்ட நபர் என கண்டுபிடித்து வீட்டில் போய் ஆதாரங்களை தேடி இத்தனையும் அவர்கள் (NIA) நேஷனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்ஸியிடம் அனுப்பியுள்ளனர். தமிழக காவல்துறை தன்னுடைய கடைமையை செய்திருக்கிறது. முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் கடமையை மிகத் திறமையாக செயல்படுகிறார். அரசியல் காரணங்களுக்காக வீணாக சில பேர் பேசி கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க..அண்ணாமலை தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்! இதெல்லாம் அபத்தம் - எச்சரித்த தமிழ்நாடு காவல்துறை !!

அவற்றையெல்லாம் புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழக ஆளுநர் இந்தியா சனாதன நாடு என்று கூறியது குறித்து, ஆளுநர் மாதிரி ஒரு உளறல் பேர்வழியை நான் இதுவரை பார்த்தது இல்லை. சனாதன தர்மம் தான் இந்த நாட்டினுடை இலக்கியம் என்கிறார். திருக்குறள் பற்றி சொல்கிறார். சனாதனவாதியா மாறி, இந்துத்துவா பிரச்சார காரராக மாறிவிட்டார். கோவை குண்டுவெடிப்பில் உண்மை குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை அரசு எடுத்து இருக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க..மதுரை உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் சாட்டிலைட் - இணையத்தில் வைரலாகும் சூப்பர் வீடியோ !!

click me!