வந்த கையோடு வேலையை துவங்கிய வைகோ...!! முதல் அசைன்மெண்டே இதுதான்...!

By Asianet TamilFirst Published Aug 29, 2019, 3:17 PM IST
Highlights

கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே, அந்தப் பெயர் பலகைகளை மீண்டும் உடனடியாக வைக்கக்கோரி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார். 

உடல் நளிவுற்ற நிலையில் கடந்த ஒருவாரகாலமாக இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உருப்பினறுமான வைகோ வீடு திரும்பியுள்ளார். வந்ததும் வராததுமாக மீண்டும் அவர் தமிழக அரசியலில் கம்பு சுழற்ற ஆரம்பித்துள்ளார். மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுருத்தியும், அவர் கேட்பதாக தெரியவில்லை, இந்நிலையில் வைகோவின் நிலைமை குறித்து மதிமுக தலைமை கழகம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு:-

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இராமச்சந்திரா மருத்துவமனை சிகிச்சையில் நலம் பெற்று நேற்று வீடு திரும்பினார்.மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வு எடுத்து வருகின்றார். சென்னை வானூர்தி நிலையத்தின் பன்னாட்டு உள்நாட்டு முனையங்களுக்கு வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணா பெருந்தலைவர் காமராஜர் பெயர்ப் பலகைகளை அகற்றியது உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. அதைக் கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப் போராட்டம் நடத்தியது. கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே, அந்தப் பெயர் பலகைகளை மீண்டும் உடனடியாக வைக்கக்கோரி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களுக்கு வைகோ கடிதம் எழுதி உள்ளார். 

பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகின்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!