அன்று வாரிசு அரசியலை எதிர்த்த வைகோ.. இன்று மகனுக்கு மதிமுகவில் முக்கிய பதவி..!

By vinoth kumarFirst Published Oct 20, 2021, 7:21 PM IST
Highlights

வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். இதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளராக வைகோ அறிவித்தார்.

மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்யப்படுவதாக வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த  தான், தனது கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார். ஆனால், மாவட்டச் செயலாளர்கள் துரை வையாபுரிக்கு அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டவட்டமாக கூறிவந்தனர். 

இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். இதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளராக வைகோ அறிவித்தார்.

click me!