ஆர்எஸ்எஸ். வகுப்புகளில் ஆபாச படம் பார்க்கத்தான் பாடம் நடத்துவார்கள். முன்னாள் முதலமைச்சரின் பேச்சால் பரபரப்பு!

Published : Oct 20, 2021, 06:52 PM IST
ஆர்எஸ்எஸ். வகுப்புகளில் ஆபாச படம் பார்க்கத்தான் பாடம் நடத்துவார்கள். முன்னாள் முதலமைச்சரின் பேச்சால் பரபரப்பு!

சுருக்கம்

சில வருடங்களுக்கு முன்ன கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் ப்ளூ பிலிம் பார்த்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்ன கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள் ப்ளூ பிலிம் பார்த்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில நாட்களாகவே புயலடித்துக்கொண்டிருக்கிறது. ஆளும் பாஜக-வில் நடைபெற்ற அரசியல் களேபரங்கள் ஓய்ந்து புதிய முதலமைச்சரும் பொறுப்பேற்றுவிட்டார். ஆனாலும் உட்கட்சி சண்டை தீர்ந்துவிட்டதால் பா.ஜ.க. தலைவர்கள் எதிர்க்கட்சிகளோடு முட்டி மோதி விளையாடி வருகின்றனர். அதிலும் பா.ஜ.க. மாநில தலைவர் நலின் குமார் காடிலின் பேச்சு கர்நாடகத்தில் எதிர்க்கட்சியினரை கொந்தளிப்படைய செய்துள்ளது.

இருதினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த நலின் குமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர், அவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் கடுமையாக விமர்சித்தார். நலின் குமாரின் பேச்சுக்கு எதிராக பொங்கியெழுந்த காங்கிரஸ் கட்சியினர், நலின் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் குமாராசாமியிடமும் நலின் குமார் காட்டில் வார்த்தை யுத்தம் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் குமாரசாமி குறித்து விமர்சித்த நலின் குமார், அவருக்கு நற்பன்புகள் இல்லை. குமாரசாமி ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு சென்று நல்ல பன்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், நலின் குமாருக்கு பதிலடி கொடுத்துள்ள குமாராசாமி, ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளில் ஆபாச படங்கள் பார்க்கத்தான் பயிற்சி கொடுப்பார்கள் வேறேதும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். அதனால் நான் ஆர்.எஸ்.எஸ். சாக்கா வகுப்புக்கு செல்ல தயாராக இல்லை என்றார். ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளில் கற்றுக்கொண்டதை வைத்துதான் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டப்பேரவையிலேயே ஆபாச படம் பார்தனர். அதனையும் இந்த நாடு பார்த்தது என்று கூறியுள்ள குமாரசாமி, ஏழை மக்களுடன் நாம் கற்கும் பாடம் போதுமானது என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!