பணியின் போது அலட்சியம்.. முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் சஸ்பெண்ட்.!

By vinoth kumarFirst Published Oct 20, 2021, 6:35 PM IST
Highlights

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால்பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

பணியின் போது அலட்சியமாக இருந்ததாகவும், தனது பொறுப்பில் இருந்து தவறியதற்காகவும் முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு அருகே ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால்பண்ணையில் இருந்து திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் பொறியியல் மேலாளராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஜெயலலிதா அதிமுக ஆட்சியில் பதவி வகித்த வளர்மதியின் 2வது மகன் ஹரிராம் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இந்த பால் பண்ணையில் 5 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பாய்லர் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் அந்த பாய்லர் திடீரென பழுதாகியது. அதனை பராமரித்து பழுது பார்க்கும் பொறுப்பு ஹரிராமிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பாய்லர் பழுதாகிய நிலையில் ஹரிராம் 2 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பணியின் போது அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக ஹரிராம் சஸ்பெண்ட் செய்து ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

click me!