அறம் காக்கும் அமைச்சர் சேகர்பாபு...... குன்றக்குடி அடிகளாரின் பாராட்டு மழையில் நெகிழ்ந்த அமைச்சர்…!

By manimegalai aFirst Published Oct 20, 2021, 6:14 PM IST
Highlights

முதலமைச்சர் அறிவித்த பத்து கல்லூரிகளில் முதல் 4 கலை அறிவியல் கல்லூரிகள் அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்த பத்து கல்லூரிகளில் முதல் 4 கலை அறிவியல் கல்லூரிகள் அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர் பாபு, அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறார். திமுக-வை இந்துவிரோத கட்சி என்று வசைபாடும் கட்சிகள் கூட அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகின்றனர். அதற்கு சான்றாக குன்றக்குடி அடிகளாரும் தற்போது அமைச்சரை புகழந்து பேசியுள்ளார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, மாணவ, மாணவியர்களுக்கு வரலாறு படைக்கலாம் வா சிகரங்களை நோக்கி நிகழ்ச்சி நடைபெற்றது. நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பொன்னம்பல அடிகளார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துசமய  அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அரசியல் களமாக இருந்தாலும் சரி, வேறு எந்த களமாக இருந்தாலும் என்ன தான் திறமைசாலிகளாக இருந்தாலும் அவர்கள் உழைக்க களம் அமைந்தால் மற்றுமே வெற்றி பெற முடியும். ஒருவர் வரலாறு படைக்க வேண்டுமென்றால் அதற்கான கட்டமைப்பு மற்றும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் தேவை. ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் 10 கல்லூரிகளை அறிவித்துள்ளார். ஏழை மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் 4 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது என்றார்.

இதையடுத்து பேசிய குன்றக்குடி அடிகளார் அறம் காக்கும் காவல்துறையயாக அமைச்சர் சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், செயல்பட்டு வருகிறார். என்று ஏகத்துக்கும் பாராட்டி பேசினார்.

click me!