
பெங்களூரு புகழேந்தி, ஜெ.பேரவை ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், செய்தி துறை கடம்பூர் ராஜு ஆகியோரை தொடர்ந்து, ஓ.பி.எஸ். வேண்டாம். சின்னம்மாதான் வேண்டும் என அடம்பிடிக்கும் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார் கடலூர் எம்சி சம்பத்.
தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்திக்க டெல்லி சென்றிருக்கும் வேலையில், அவருக்கு எதிராக தொடர்ந்து அதிமுகவில் கலக குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன.
பதவியேற்று 2வது வாரத்திலேயே ஒ,பி,எஸுக்கு இந்த அளவுக்கு எதிர்ப்பு வலுக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க முடியாது. ஏன் ஓ,பி,எஸ், கூட எதிர் பார்த்து இருக்கமாட்டார்.
ஓ,பி,எஸ்சை வாய் குளிர, “அண்ணா… அண்ணா…” என்று அழைத்தவர்கள் எல்லாம், தற்போது “வெளியே போ… வெளியே போ…” என கோஷமிடுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியின்போது, இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் போன்ற அமைதியான நபர்களை தூண்டிவிடுவது யார் என்றும், ஓபிஎஸ் மறைமுகமாக விசாரிப்பதாக தெரிகிறது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.சி.சம்பத், மன்னார்குடி திவாகரனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. எனவே தான், ஓ.பி.எஸ். பதவி விலக வேண்டும் என்றும், சின்னம்மா சசிகலா முதலமைச்சாரகவும் பதவியேற்க வேண்டும் எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஏற்கனவே தேவர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், ஒ.பி.எஸுக்கு எதிராக இயங்கி இருக்கும் வேலையில், தற்போது வண்னியர் சமூகத்தை சேர்ந்த சீனியர் அமைச்சரான எம்..சி.சம்பத்தும் ஒ.பி.எஸ். பதவி விலக வேண்டும் என்பது பரபரப்பை ஏற்படுத்யுள்ளது.
தன்னுடைய சகாக்கள், தன்னை வெளிப்படையாக எதிர்த்துவிட்ட நிலையில், அவர்களது கோரிக்கைகளுக்கு பணிந்து, ஓ.பி.எஸ். பதவி விலகுவாரா…? “அல்லது வாங்கடா ஒரு கை பார்க்கலாம்” என மல்லுக்கட்டுவாரா…? டெல்லியில் இருந்து ஒ.பி.எஸ். சென்னை வந்தவுடன் இதற்கு விடை கிடைக்கும்.