பிரதமரை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ்….வர்தா புயல் நிவாரண உதவிகோரி மனு அளிக்கிறார்…

 
Published : Dec 19, 2016, 07:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
பிரதமரை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ்….வர்தா புயல் நிவாரண உதவிகோரி மனு அளிக்கிறார்…

சுருக்கம்

பிரதமரை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ்….வர்தா புயல் நிவாரண உதவிகோரி மனு அளிக்கிறார்….

கடந்த 12 ம் தேதி வீசிய வர்தா புயல் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து புயல் பாதிப்பை ஈடு செய்ய உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு, ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் வர்தா புயல் நிவாரணம் வழங்கக்போரும் கோரிக்கைகள் அடங்கி மனுவை பிரதமரிடம் அளிப்பதற்காக இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

வர்தா புயல் நிவாரணம் மட்டுமல்லாமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்,

ஓபிஎஸ் முதலமைச்சர் ஆன பிறகு முதன்முதலாக டெல்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார். அவருடன் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 6 அரசுச் செயலாளர்கள் உடன் சென்றுள்ளனர்..
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!