
சசிகலா எதிர்ப்பு அதிமுக தொண்டர்களின் எண்ணத்துக்கு தற்போது ஆரம்பப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
எப்படியாவது, தற்போதைய அதிமுக முகாமுக்குள் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதுதான் ஜெயலலிதாவின் தீவிர வசுவாசிகள் மற்றும் சசிகலாவின் தீவிர எதிர்ப்பாளர்களின் எண்ணமாக உள்ளது.
ஜெயலலிதாவின் ‘சாய்சாக‘ இருந்த ஒ.பன்னீர்செல்வம், 3வது முறை முதலமைச்சராக பதவியேற்றது முதல் ஒரு தரப்பினர் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இருந்த பன்னீர்செல்வமோ பழைய பன்னீர்செல்வம். ஆனால், டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு புதிய பன்னீர்செல்வமாக மாக மாறியுள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம், 3வது முறையாக பதவியேற்றது முதலே, மொத்தமாக குனிந்து இருந்த ஒ.பி.எஸ்., தற்போது நார்மலாக நடக்கவும், நிமிரவும் தொடங்கிவிட்டார்.
வர்தா புயல் மீட்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் இடையேயும், பத்திரிகைகள் இடையேயும் மார்க்குகளை அள்ளி குவித்துவிட்டார். இதனால், ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த ஒரு குரூப், ஒபிஎஸ் மீது இன்னும் கடுப்பாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சசிகலா முன் ஜாமீனுக்கு கையெழுத்திட்டவரும், தனது சொத்துக்களை செக்யூரிடியாக கொடுத்தவருமான கர்நாடக மாநில அதிமுக செயலாளரான வ.புகழேந்தி, தமிழ்நாட்டு அதிமுககாரர்களைவிட ஒருபடி மிஞ்சிவிட்டார்.
பொதுச் செயலாளர் என்ற கோஷம்போய், சசிகலா முதலமைச்சராகவே பதவியேற்க வேண்டும் என்றும், ஒ.பி.எஸ். பதவி விலக வேண்டும் என்றும் முதல் ஆப்பை வைத்தார்.
சும்மா இருப்பார்களா நமது தமிழ்நாட்டு ரத்தத்தின் ரத்தங்கள். சசிகலா குடும்பத்துக்கு ஆரம்பநாள் முதல் விசுவாசமான, சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்டேஷின் கண்டுபிடிப்பான அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெ.ஜெயலலிதாவின் பேரவை செயலாளாரகவும் உள்ளார்.
மொத்தம் உள்ள 50 உட்கட்சி மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக ஜெ. பேரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றி, அதில் 3 அமைச்சர்களை உள்ளடக்கி, ஒட்டு மொத்தமாக அம்மா சமாதிக்கு வந்து சூளுரைத்தனர். அங்கு உதயகுமார் தலைமையில் சூளுரைத்த வார்த்தைகள்தான் ஓ.பி.எஸ். காலி ஆகிறார் என்பது உறுதியானது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒ.பி.எஸுக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. மாநிலங்களவை எம்பி சசிகலா புஷ்பா, சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன் குடும்பத்தினர் கை கோப்பார்கள் என தெரிகிறது.
போதாத குறைக்கு சசிகலாவின் அக்கா மகனான தினகரனின் ஆதரவாளரும் ஒ.பி.எஸ்சின் தேனி மாவட்ட உட்கட்சி எதிரியுமான தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவையும் கொம்பு சீவி விட்டுள்ளனர் எதிர் தர்ப்பினர்.
இதனால் ஆடிப்போன ஒ.பன்னீர்செல்வம், நேற்று சம்பிரதாயபடி கவர்னரை சந்தித்தார். பின்னர் அதில் பேசப்பட்ட விவகாரத்தை கார்டனுக்கு கொண்டு சென்று பாஸ் செய்தார். பின்னர் மீண்டும் கவர்னரை சந்திக்க புறப்பட இருந்த நிலையில் விசிட்டை கேன்சல் செய்தார் ஓபிஎஸ்.
சில பல காரணங்களுக்காக , கவர்னரை இரண்டாவது முறையாக சந்திக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது . ஆனால் கவர்னரை முதலமைச்சர் சந்திப்பது நடைமுறையில் இல்லாததாலும் , மரபு அல்ல எனபதாலும், விஷயம் வெளியில் தெரிந்தால் சர்ச்சைக்குள்ளாகும் என்பதாலும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ் இரண்டாம் முறையாக கவர்னரை சந்திக்க கிளம்புவதற்காக போலீஸ் அலர்ட் எல்லாம் போட்டு ரூட் கிளியர் செய்து வைத்த போது மேற்கண்ட காரணங்களால் ரத்து செய்துவிட்டார். ஆனால் எந்த விஷயத்தை நேரில் விவாதிக்க வேண்டும் நினைத்தார்களோ அதை தொலை பேசியில் பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், அதிகாலையில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்று விட்டார். டெல்லியில் அவரை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிரை வரவேற்று, பிரதமரிடம் அழைத்து சென்றார்.
அதிமுகவில் ஒபிஎஸுக்கு எதிராக கலக குர்லகள் எழுந்துள்ள நிலையில், இன்னும் பரபரப்பான சம்பவங்கள் அடுத்து வரும் நாட்களில் அரங்கேறும் என தெரிகிறது.