வந்த வேகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த மேயர் பிரியா.. மின்னல் வேகத்தில் பணிகள்.. ஒப்பந்ததாரர்களுக்கு போட்ட உத்தரவு.

Published : Mar 14, 2022, 05:41 PM IST
வந்த வேகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த மேயர் பிரியா.. மின்னல் வேகத்தில் பணிகள்.. ஒப்பந்ததாரர்களுக்கு போட்ட உத்தரவு.

சுருக்கம்

திருப்புகழ் தலைமையில் வல்லுநர்களை கொண்ட வெள்ள மேலாண்மை குழுவின் ஆலோசனை படி இராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ 186 கோடி மதிப்பில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.  

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆணைகளை சென்னை  மாநகர மேயர் பிரியா ராஜன் வழங்கினார். வருகின்ற பருவமழைக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். எழில்மிகு சென்னை, சிங்காரச் சென்னை என எத்தனை திட்டங்கள் கொண்டு வந்தாலும் மழைக்காலம் வந்தால் மிதக்கும் சென்னையாக மாறிவிடுகிறது. அதிலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது பெய்த கன மழையில் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியது. தியாகராய நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம்,  அசோக் நகர் என ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாத அளவுக்கு குளம் போல தேங்கியது. இதனால் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகினர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற  பெயரில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைத்து சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்புகள் குறித்து ஆராயப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக சென்னை மாநகராட்சிக்கு மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே சென்னை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகள் அனைத்தும் வேகமெடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின்கீழ் ரூ.176.94 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி. பணிகளுக்கான பணி ஆணைகள்  மேயர் பிரியா  ஒப்பந்ததாரர்களுக்கு இன்று வழங்கினார். அத்துடன் வருகின்ற பருவமழைக்குள் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.  

திருப்புகழ் தலைமையில் வல்லுநர்களை கொண்ட வெள்ள மேலாண்மை குழுவின் ஆலோசனை படி இராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ 186 கோடி மதிப்பில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது.ரூ. 176 . 94 கோடி ஒப்பந்த பணிகளுக்கான பணி ஆணைகள் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்தப்பணிகளை உடனடியாக தொடங்கி வருகின்ற பருவ மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம். திருவிக, நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 119.33 கோடி மதிப்பில் 45 கீ.மி நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் புளியந்தோப்பு பகுதியில் ரூ. 7.40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!