பேச்சுவார்த்தைக்கு அழைக்காத திமுக... அதிருப்தியில் மார்க்சிஸ்ட்... அடுத்தகட்டம் பற்றி கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 7:14 PM IST
Highlights

 மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்பதால் திமுக பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் திமுகவில் தொடர்ந்து இடியாப்ப சிக்கல் நிலவி வருகிறது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்பதால் திமுக பேச்சுவார்த்தை இழுபறியாக மாறியுள்ளது. கடந்த 2ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 12 தொகுதி கேட்டதாகவும், திமுக 6 தொகுதிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

நாளை மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோருடன் கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், மக்கள் நீதி மய்யத்துடன் 3வது அணி அமைப்பதற்காக எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்தார். 

click me!