என்ன ஒரு ராஜதந்திரம்.. திமுக கூட்டணி கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்த ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 5, 2021, 6:56 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில், அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2  இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள  நிலையில், அதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன்;- இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 3 தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடும் என கூறியிருந்தார். 

ஆனால், ஜவாஹிருல்லா  திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடும். எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜவாஹிருல்லா மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜவாஹிருல்லா;- ஒரு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!