#BREAKING நினைத்ததை சாதித்த திமுக... 6 தொகுதிக்கு ஓகே சொன்ன இந்திய கம்யூனிஸ்ட்... கையெழுத்தானது ஒப்பந்தம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 5, 2021, 6:12 PM IST
Highlights

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் அடங்கிய பட்டியல் திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதால் அரசியல் கட்சி தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கியாகி விட்டது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. கேட்கும் தொகுதிகளை கொடுப்பதில் திமுக கறார் காட்டுவதாகவும், பெரியண்ணன் மனப்பான்மையோடு கூட்டணி கட்சிகளை நடத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

இரட்டை இலக்கத்தில் சீட்டு கேட்டு வந்த விசிக இறங்கி வந்ததை அடுத்து, அதே டெக்னிக்கை தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் காட்டி வருகிறது திமுக. 12 சீட்டுக்கள் வரை கேட்டுக்கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தற்போது 6 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2ம் தேதி முதற்கட்டமும், நேற்று இரண்டாம் கட்டமும் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் அடங்கிய பட்டியல் திமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது. திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இன்று சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. 6 தொகுதிகளை ஒப்புக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன், சிலகட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்து வகுப்புவாத சக்திகள் தமிழகத்தில் காலுன்ற முயற்சிப்பதாகவும், உரிய கொள்கை, லட்சியத்துடன் திமுக கூட்டணியில் இணக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். 
 

tags
click me!