கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்து.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேமுதிக.!

By vinoth kumarFirst Published Mar 5, 2021, 5:33 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் போட்டியிட 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம் என தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம் என தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு இணையான தொகுதிகளை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், அதிமுக  தேமுதிக இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக கூட்டணியில் தற்போது வரை நீடிக்கிறோம். அதிமுகவிடம் 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என முதலில் கேட்டோம். 25 தொகுதிகளாவது தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். நாங்கள் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்டோம். அதிமுகவும் தர ஒப்புக்கொண்டுள்ளது. 

கேட்கும் தொகுதிகளை தருவதாக இருந்தால் கையெழுத்து போடுவோம். அதிமுகவை தவிர வேறு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. 2 நாளில் நல்ல முடிவு வரும் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை என்றால் அதற்கு அவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

click me!