மார்ச் 1 ராகுல் கன்னியாகுமரி வருகை.. உற்சாக வரவேற்பு அளிக்க விஜய் வசந்த் தீவிரம்.. கலைகட்டும் காங்கரஸ்

Published : Feb 27, 2021, 01:28 PM ISTUpdated : Feb 27, 2021, 01:34 PM IST
மார்ச் 1 ராகுல் கன்னியாகுமரி வருகை.. உற்சாக வரவேற்பு அளிக்க விஜய் வசந்த் தீவிரம்.. கலைகட்டும் காங்கரஸ்

சுருக்கம்

பின்னர் ராகுல் காந்தி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.எனே அந்த இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். 

வருகிற மார்ச் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அதிகாரிகள் கன்னியாகுமரி வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம் மற்றும் சர்ச்சு ரோடு ஆகிய இடங்களில் பாதுகாப்பு குறித்து பார்வையிட்டனர். 

பின்னர் ராகுல் காந்தி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.எனே அந்த இடங்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இருந்த  தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறும்போது, இளம் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 1ஆம் தேதி குமரி வருகிறார், அவருக்கு மாவட்ட மக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர். 

அதை எழுச்சி நாளாக காங்கிரஸ் தொண்டர்கள் மாற்ற உள்ளனர். அவரின் வருகையின்போது அனைவரும் வந்து ராகுல் ஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். என கேட்டுக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் MLA ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர். தந்தை வசந்த் குமார் தன் இறுதி மூச்சு வரை காங்கிரஸ்காரராக இருந்து உயிரிழந்துள்ள நிலையில், அவரது மகன் விஜய் வசந்த், தன் தந்தையின் இடத்தை நிரப்பும் வகையில் தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!