விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல்.. சிபாரிசு செல்லுபடியாகாது என அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2021, 1:03 PM IST
Highlights

குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர் மட்டும் வரவேண்டும். மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி கழக செயலாளர்கள் வரவேண்டிய  அவசியமில்லை, பரிந்துரைப்பவர்களையும் அழைத்து வரக்கூடாது, அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்று தெரிவிக்கப்படுகிறது.  அன்படி, 

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் விருப்ப மனு கொடுத்துள்ளவர்களுக்கான நேர்காணல் மார்ச் 2 முதல் மார்ச் 6 வரை பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுமென, நாள், நேரம், மாவட்டத்தின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களை, கழகத் தலைவர் அவர்கள் 2-3-2021 முதல் 6-3- 2021 தேதி வரை பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிய இருக்கிறார். 

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தை சார்ந்த மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர் மட்டும் வரவேண்டும். மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி கழக செயலாளர்கள் வரவேண்டிய  அவசியமில்லை, பரிந்துரைப்பவர்களையும் அழைத்து வரக்கூடாது, அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்று தெரிவிக்கப்படுகிறது.  அன்படி, 

மார்ச் 2 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு:  கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு.  திருநெல்வேலி கிழக்கு ,மத்திய. தென்காசி வடக்கு. தெற்கு.  ராமநாதபுரம். மாலை 4 மணிக்கு:  விருதுநகர் வடக்கு, தெற்கு,  சிவகங்கை, தேனி  வடக்கு, தெற்கு,  திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும். 

மார்ச் 3 புதன்கிழமை காலை 9 மணிக்கு: மதுரை வடக்கு தெற்கு மதுரை மாநகர் வடக்கு தெற்கு நீலகிரி ஈரோடு வடக்கு தெற்கு, மாலை 4 மணிக்கு திருப்பூர் மத்திய வடக்கு திருப்பூர் கிழக்கு தெற்கு கோவை கிழக்கு வடக்கு தெற்கு கோவை மாநகர் கிழக்கு மேற்கு. கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, ஆகிய மாவட்டங்களுக்கும் நடைபெறும் 

மார்ச் 4 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு:  தர்மபுரி கிழக்கு, மேற்கு நாமக்கல் கிழக்கு, மேற்கு சேலம், கிழக்கு, மேற்கு மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு. மாலை 4 மணிக்கு கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர் நாகை வடக்கு தெற்கு ஆகிய  மாவட்டங்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 5 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு: தஞ்சை வடக்கு தெற்கு மத்திய கடலூர் கிழக்கு மேற்கு கள்ளக்குறிச்சி வடக்கு தெற்கு விழுப்புரம் வடக்கு மத்திய மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு தெற்கு வேலூர் கிழக்கு மேற்கு மத்திய காஞ்சிபுரம் வடக்கு தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 6 சனிக்கிழமை காலை 9  மணிக்கு:  திருவள்ளூர் கிழக்கு மத்திய மேற்கு சென்னை வடக்கு வடகிழக்கு  தெற்கு சென்னை தென் மேற்கு தென்மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கும் மாலை 4 மணிக்கு புதுச்சேரி  காரைக்காலுக்கு நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!