ஓடி ஓடி வேலை செஞ்சு வாக்கு கேட்ட மன்சூர் அலிகானின் நிலை என்ன தெரியுமா?

By manimegalai aFirst Published May 23, 2019, 4:45 PM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் திமுக 19 இடங்களிலும், அதிமுக கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் திமுக 19 இடங்களிலும், அதிமுக கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

திண்டுக்கல் தொகுதியில் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வீடு வீடாக சென்று, எப்போதும் வாக்கும், சேகரிக்கும் சாதாரண வேட்பாளர்கள் போல் இல்லாமல் ,   சற்று வித்தியாசமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இவர் போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்தும், அங்கு வேலை செய்தவர்களுக்கு உதவிகள் செய்தும் ஒட்டு கேட்டார். குறிப்பாக இவர் பஜ்ஜி போட்டது, காய் கறி விற்றது, குப்பை வாரியது, செருப்பு தைத்தது, போன்ற வேலைகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளிலும் பலர் மன்சூரலிகான் வெற்றி பெற வேண்டும் என கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியதில், மன்சூர் அலிகான் நான்காவது இடத்தில் உள்ளார்.  

திமுக முன்னிலையிலும், அதிமுக கட்சி இரண்டாவது இடத்திலும், மக்கள் நீதி மையம் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். இவர் வெற்றிபெறுவது உறுதி இல்லை என்றாலும், கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்.

click me!