பிஜேபி போட்ட மாஸ்டர் ப்ளான்!! அதிமுக ஆட்சியை கலைத்து அதகளம் பண்ண ஸ்கெட்ச்....

By sathish kFirst Published May 23, 2019, 4:35 PM IST
Highlights

பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைவது உறுதியானாலும் தமிழகத்தில் அதன் கூட்டணிகட்சியான அ.தி.மு.கவின் ஆட்சி தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது.

பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைவது உறுதியானாலும் தமிழகத்தில் அதன் கூட்டணிகட்சியான அ.தி.மு.கவின் ஆட்சி தொடருமா? என கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆட்சியை கலைக்க பா.ஜ.க உத்தரவு போட்டிருப்பதாகவும் அதற்கு அ.தி.மு.க தலைமை தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

தமிழகம் முழுவதும் தற்போது திமுக 37 இடங்களிலும் மினிசட்டமன்ற தேர்தலில் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.கவிற்கு இந்த இடைதேர்தலில் 8 இடங்களே கிடைக்க வாய்ப்பு இருப்பதால் ஆட்சி கலையும் ஒரு சூழல் நிலவுகிறது. இது ஆளும்கட்சியான அ.தி.மு.கவிற்கும் நன்றாக தெரியும். 

இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி சாமளித்து ஆட்சியை தக்கவைக்க யோசித்து கொண்டுக்கிறது அ.தி.மு.க, அ.தி.மு.க இப்படி யோசித்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் பா.ஜ.க ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க ஆலோசனை கொடுத்துவிட்டதாம். 

இந்த தகவலை தமிழக தேர்தல் கூட்டணியில் முக்கிய பங்கு வகித்த நிதின் கட்கரி மூலம் சொல்லி இருக்கிறாரம் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு அ.தி.மு.க தலைமையும் தலை அசைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேளை அ.தி.மு.க ஆட்சி கலைத்து தேர்தலை சந்தித்தால் பா.ஜ.க எம்.எல்.ஏ சீட் கேட்பது மட்டுமல்லால் தமிழகத்தில் காலூன்ற ஒரு முயற்சியாக இது இருக்கும் என பார்க்கப்படுகிறது.

click me!