
சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறார். அதே நேரத்தில் அவரது கட்சியை சேர்ந்த ரவிகுமார் விழுப்புரம் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
தொல் திருமாவளவன் கட்சி தலைவராக இருந்தும், விஐபி வேட்பாளராக களமிறங்கியும் வெற்றி பெற திணறி வருகிறார். காரணம் அவர் போட்டியிட்ட பானை சின்னம். திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. விழுப்புரம் தொகுதியில் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், திருமாவளவன் கட்சியின் அங்கீகாரம் கருதி பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
இது தான் அவரது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. உதய சூரியன் சின்னம் எளியவர்களாலும் அறியக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், பானை சின்னத்தை அவர் வாக்காளர்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. இதனால், தான் திருமாவளவன் செல்வாக்கு இருந்தும் வெற்றிபெற திணறி வருகிறார். ஒருவேளை அவர் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி இருந்தால் எளிதாக வெற்றி பெற்று இருப்பார் என்கிறார்கள் விசிக நிர்வாகிகள்.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே திருமாவளவனை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் எனக் கருத்திய திருமா பானை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை பானை கவிழ்த்து விட்டது.