ஜெ.வின் மகளே பொறுத்தது போதும்..! அரசியலுக்கு வாங்க...பிரேமாவை சந்தித்து கோரிக்கை வைத்தவர்கள் யார் தெரியுமா?

By Ajmal KhanFirst Published Jul 12, 2022, 1:38 PM IST
Highlights

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறும் ஜெயலட்சுமி என்ற பிரபாவை மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் சந்தித்து அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்போ எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமியை கட்சியை விட்டு நீக்கி பதிலடி கொடுத்தது. இந்த கலவரத்திற்கு மத்தியில் ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும்  ஜெயலட்சுமி, என்ற பிரபாவை  அரசியலுக்கு வருமாறு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் அழைப்பு விடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.மகளுக்கு அழைப்பு..?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒவ்வொருத்தராக நான்  தான் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்கள், அவர்களின் புகைப்படமும் சமூக வலை தளத்தில் பரவி அதிர்ச்சியை உருவாக்கும் அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஜெயலலிதா நினைவிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி என்கிற பிரபா இவரை அரசியலுக்கு வருமாறு மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பாக அதன் நிறுவனர் ஆ.சா.செல்வராஜ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆளுயர ரோஜா மாலை அணிவித்தும், பொன்னாடைகள் அணிவித்தும் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ், ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமியை  அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தோம், அவரும் மண்ணின் மைந்தர்கள் கட்சிக்கு  இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளதாக  கூறினார்.

திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

ஜெயலலிதா புழுக்கு களங்கம்

ஜெயலலிதாவின் மகள் என பலர் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக கொருத்து தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகிகள், பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு இது போன்று சிலர் கிளம்பி வருவதாகவும், எனவே இது ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

யாராயிருந்தாலும் வெட்டுங்கள்..! அடித்து உதையுங்கள்..! மைக்கில் பேசிய ஓபிஎஸ்- மாவட்ட செயலாளர் புகார்

 

click me!