2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாகவும், அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங், தன்னை கைது செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதனால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் அப்போதைய மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் குற்றத்தை சிபிஐ நிரூபிக்கவில்லை என கூறி ஆ.ராசா உள்ளிட்டோரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் 2ஜி வழக்கில்இருந்து விடுதலையான பிறகு முதல் முறையாக ஆ.ராசாவு கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், 2 ஜி வழக்கில் நான் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு கிடைத்துள்ளது. 2 ஜி விவகாரத்தில் ஊழல் எதுவும் இல்லை என நிரூபணமாகி இருக்கிறது. நீதி வென்றிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் மூலமாக மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, வர உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்' என்றார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாகவும், அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங், தன்னை கைது செய்தால், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.
திமுகவை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக சதி நடந்தது. ஆனால், இறுதியில் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்பகுதியின் ஜீவாதாரப் பிரச்னையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்