
வரும் 8 ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலளர் பூபதி வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற இருக்கிறார். அடுத்த நாள் 9-ஆம் தேதி சட்டசபைக்கு விடுமுறை 10, 11, 12-ஆகிய தேதிகளில் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும், இந்த நாட்களில் எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பு விவாதங்களையும் முன்வைக்கும், கூட்டதொடரின் இறுதி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிப்பார்.
இதனையடுத்து, ஆர்கே நகர் இடைதேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கு சபாநாயகர் தனபால் நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். தினகரன் சட்டசபைக்குள் முதல்முறையாக தனியாக செல்கிறார்.
ஏற்கனவே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன் சட்டமன்றத்திற்குள் நான் சென்றால் யார் ஸ்லீப்பர் செல் என்பது தெரியவரும் என்றார். அதேபோல, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் சட்டமன்றத்திற்கு டிடிவி தினகரன் வந்தால் பூச்சி மாதிரி அவரை நசுக்கிவிடுவோம் என்றார். இப்படி தினகரன் யாருக்கும் அஞ்சாமல் சட்டமன்றத்திலும் டிடிவி தினகரன் தனித்து செயல்படுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சட்டமன்றத்தில் இனிமேல் வாய்க்கு வந்ததை முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசமுடியாது, அவர்களுக்கு சரியான கவுன்டரை டிடிவி தேவைபட்டால் திமுகவோடு கைகோர்க்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
விவாதங்களின் நிச்சயம் ஆளும்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை பலமாக இருக்கும் திமுக எடுக்ககூடும். தினகரனும் திமுகவோடு கைகொர்க்கவேண்டிய கட்டயத்திற்கு ஆளாவார்.
ஒட்டுமொத்தமாக இதுவரை கைக்குள் வைத்திருந்த அமைச்சர்கள் முதல், எம்.எல்.ஏக்கள் வரை, ஏன் முதல்வர், துணைமுதல்வர் என ஒட்டுமொத்தமாக அனைவரின் பார்வையும் தினகரன் மீது தான் இருக்கும், சட்டசபையில் வரும் தினகரனுக்கு எந்த இடத்தில் இருக்கை அமைக்கப்படும்? தினகரன் என்ன பேசுவார்? அவர் பேசினால் பேசினால் எப்படி ரியாக்ட் செய்வது. என்று எம்.எல்.ஏக்களுக்கு பலருக்கு இன்னும் தெளிவில்லை. கூட்டத்தொடருக்கு லீவு போட்டுவிட்டு பல எம்.எல்.ஏக்கள் சொந்த ஊருக்கு பொட்டி கட்டை வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அதையும் மீறி, சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏக்கள் தினகரனை எப்படி சமாளிக்கணும் என எம்.எல்.ஏக்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளார்களாம்.
அதுமட்டுமல்ல, பலமான எதிர்கட்சி யான திமுகவின் எதிர்ப்புக்குரலோடு, தனி ஒருவனாக வரும் தினகரனின் குரலும் ஓங்கி ஒலிக்கும் நிலை வந்தால் எப்படி சமாளிப்பது என, சபாநாயகர் தனபாலுடன் எடப்பாடியார், தற்போது ஆலோசனையில் உள்ளார். அதே நேரத்தில், தினகரனின் மூவ்களை கவனிக்கவும், தினகரனின் அடுத்தகட்ட ப்ளான் என்ன? உளவுத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளதாம் ஆளும் தரப்பு.
2018ம் ஆணடு தொடக்கத்திலேயே தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் தனிஒருவனால் சண்டை சபை கூட்டத்தொடராக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.