மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்... அறிவித்தது மனிதநேய மக்கள் கட்சி!!

By Narendran S  |  First Published Oct 5, 2022, 5:35 PM IST

மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. 


மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதுக்குறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதையும் படிங்க: குறுவை பயிர் சேதம் குறித்து ஈபிஎஸ் அறிக்கை... அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!!

Tap to resize

Latest Videos

உபா சட்டத்தையும், என்.ஐ.ஏ. அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் கவர்னரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், பொது மக்களும் திரளாகபங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. எடப்பாடியை ஜர்க் ஆக்கிய வைத்தியலிங்கம்.

மேலும் ஆளுநர் மாளிகை அருகே நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த. வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

click me!