எங்களிடையே குழப்பம் விளைவிக்க நினைச்சால் அழிச்சிருவோம் !! மம்தா பானர்ஜி ஆவேசம் !!

Published : Jun 06, 2019, 09:42 AM IST
எங்களிடையே குழப்பம் விளைவிக்க நினைச்சால் அழிச்சிருவோம் !! மம்தா பானர்ஜி ஆவேசம் !!

சுருக்கம்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் யாராவது குழப்பம் விளைவிக்க நினைத்தால் அவர்களை அழித்துவிடுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து இந்த இரு கட்சிகளுக்கும் இடையே  கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவி வருகிறார்கள். இது மம்தா பானர்ஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, கொல்கத்தாவில், தொழுகை நடத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களுக்கு  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி நேரடியாக வாழ்த்து தெரிவித்தார்.

அவர்களிடையே பேசும் போது, எங்களிடையே குழப்பம் விளைவிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள். இதுதான் எங்கள் முழக்கம். பாஜக, அரசியலையும், மதத்தையும் கலந்து ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கமிட்டு வருகிறது.

 நடுவானில் இருக்கும்போது சூரியன் சுட்டெரித்தாலும், மாலையில் தணிந்து விடும். அதுபோல், ஓட்டுப்பதிவு எந்திரங்களை கைப்பற்றி வெற்றி பெற்றவர்கள், விரைவில் ஓடி விடுவார்கள் என மம்தா ஆவேசமாக பேசினார்
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?