எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கவிழ்க்க முயற்சி... திமுக முன்னாள் அமைச்சர் என்ன சொல்ல வரராரு?

By Asianet TamilFirst Published Jun 6, 2019, 7:07 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள 233 உறுப்பினர்களில் திமுக கூட்டணிக்கு 109 இடங்கள் உள்ளன. சபாநாயகரை தவிர்த்து ஆளும் அதிமுகவுக்கு 122 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மெஜாரிட்டிக்கு மிகவும் நெருக்கமாக அதிமுக - திமுக கட்சிகள் உள்ளன. 

ஆட்சியில் நாம் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலில் முழு செலவையும் அடிச்சி விட்டுவிடலாம் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள 233 உறுப்பினர்களில் திமுக கூட்டணிக்கு 109 இடங்கள் உள்ளன. சபாநாயகரை தவிர்த்து ஆளும் அதிமுகவுக்கு 122 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மெஜாரிட்டிக்கு மிகவும் நெருக்கமாக அதிமுக - திமுக கட்சிகள் உள்ளன. இடைத்தேர்தலில் எப்படியும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டம் வகுத்தார். ஆனால், தேர்தலில் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது அதிமுக.


இந்நிலையில் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற முயற்சியில் திமுக ஈடுபட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. 15 முதல் 10 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு திமுக தரப்பில் வலை விரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெற வைத்து ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் திமுகவில் சிலருக்கு அசைன்மெண்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன. திருச்சி, கரூர், தூத்துக்குடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இந்த அசைன்மெண்ட் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற மாவட்ட திமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசிய பேச்சு பரபரப்பை இன்னும் கூட்டியிருக்கிறது. “ஜூன் 10 அன்று திருச்சியில் சிலை திறப்பு நிகழ்ச்சியும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டமும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு சிரமத்தை நான் குறைத்து விடுவேன். யாரும் கவலைப்பட வேண்டாம். அப்போது நாம் ஆட்சியில் இருந்தால் முழு செலவையும் அடிச்சி விட்டுவிடலாம்” என்று பூடாகமாகப் பேசினார்.
 கே.என். நேருவின் பேச்சு கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருப்பதை நேருவின் பேச்சு காட்டுவதாகப் பரபரப்பு எழுந்துள்ளது. 

click me!