அமித்ஷாவுடன் மம்தா திடீர் சந்திப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Feb 29, 2020, 9:46 AM IST
Highlights

 அமித் ஷாவும், மம்தாவும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் அதிச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

T.Balamurukan
குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி வருகின்றன. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
நாடே இந்த விவகாரத்தால் பற்றி எரியும் போது ,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வைத்த விருந்தில் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமித் ஷாவும், மம்தாவும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு தேசிய அரசியலில் அதிச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 


 
புவனேஸ்வரத்தில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாதலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முதன்முறையாக ஒடிசாவுக்கு வந்துள்ளார். மம்தா பானர்ஜிவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது..,

'குடியுரிமை சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மம்தா உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அவர்கள் ஏன் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர்?. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றார்.இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய்யான கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருகின்றன என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். 

 முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை தீர்மானிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை சட்டதிருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் இஸ்லாமியர்களை தவிர்த்து என்று குறிப்பிட்டிருப்பதுதான் பிரச்னையை ஏற்படுத்துகிறது.இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது பாஜக.

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது என்று சொல்லி ந்நடு முழுவதும் மக்களை தூண்விட்டு எதிர்க்கட்சிகள் வன்முறையை உருவாக்கி அதில் குளிர்காய்கின்றன. என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு போலீசார் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். உயிரிழப்புகளுக்காக உள்துறை அமைச்சகத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது தொடர்பாக மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் கேட்கும் போது, 'முதலில் டெல்லி,குடியுறுரிமைச் சட்டம் பிரச்சனை சரிசெய்யப்பட வேண்டும். அதன்பின்னர் நாம் அரசியல் பற்றி பேசலாம்' என்று  நச்னு பதில் அளித்தார். 

click me!