மம்தா தாக்கப்பட்டது வெட்க்கக் கேடானது.. ஜனநாயத்தின் மீதான தாக்குதல்.. கொந்தளிக்கும் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 10:16 AM IST
Highlights

மம்தா தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது,  இது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என கண்டித்துள்ளார். 

மம்தா பானர்ஜியின் மீதான தாக்குதல் அவமானகரமானது எனவும் அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐந்து மாநில தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்மாத  இறுதியல் சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பாஜகவின் கடும் நெருக்கடிக்கு இடையில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 

இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் உள்ள நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்ய மம்தா காரி சென்றிருந்தார். அப்போது அவர் காரில் ஏற முயன்றபோது நான்கு அல்லது ஐந்து பேர் அவரை திடீரென தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக கீழே விழுந்த மம்தாவின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி அவரை காரின் பின் சீட்டில் உட்கார வைத்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த மம்தா, இது தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்,  என்னைச் சுற்றி பாதுகாப்புக்குகூட போலீசார் இல்லை பாருங்கள். எனக்கறி வலியால் துடித்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரது காலில் பெரிய கட்டு சுற்றப்பட்டுள்ளது. 

அதற்கான புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து  திரினாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மம்தா தாக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது,  இது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இத்தகைய குற்றத்தை செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மம்தா ஜி விரைவாக மீண்டுவர விரும்புகிறேன். என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

click me!