உழைப்புக்கு மதிப்பில்லை... பாமகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி... அதிர்ச்சியில் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Mar 11, 2021, 10:11 AM IST
Highlights

வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும், பாமகவில் இருந்தும் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளது ராமதாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும், பாமகவில் இருந்தும் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளது ராமதாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அதிமுக - பாமக நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்பட்டது. இந்நிலையில், பாமக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகியது. இதில், ஜி.கே.மணி பென்னாகரத்திலும், கே.பாலு ஜெயங்கொண்டான் தொகுதியிலும், ஆத்தூர் திண்டுக்கல் மாவட்டம்) திலகபாமா, கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் ஆறுமுகம், தருமபுரியில் வெங்கடேசன், ஆற்காட்டில் இளவழகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

இதில், ஜெயங்கொண்டம் தொகுதியை மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்திக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வழக்கறிஞர் பாலுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், வைத்தி கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாநில வன்னியர் சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், பாமக கட்சியில் இருந்தும் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

click me!