கேட்ட தொகுதிகளைக் கொடுக்காத ஈபிஎஸ்-ஓபிஎஸ்... தேர்தலை புறக்கணித்த அதிமுக கூட்டணி கட்சி..!

By Asianet TamilFirst Published Mar 11, 2021, 8:26 AM IST
Highlights

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி கேட்ட தொகுதிகள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்தக் கட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க வந்ததால், கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேறியது. இதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்த ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி தொடக்கத்தில் 8 தொகுதிகளை எதிர்பார்த்தது. பின்னர் 6 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. படிப்படியாக தொகுதி எண்ணிக்கையைக் குறைத்துகொண்டபோதும், அந்தக் கட்சிக்கு கேட்டது எதுவுமே கூட்டணியில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏ.சி. சண்முகம் வெளியிடுள்ள அறிக்கையில், “அதிமுக கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு சரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில் 11 தொகுதிகளை முன்வைத்து, அதில் 5 தொகுதிகள் கேட்டோம். பின்னர், 9 தொகுதிகளை முன்வைத்து, நான்கு தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், கேட்ட தொகுதிகள், கேட்ட எண்ணிக்கையில் ஒதுக்கி தரப்படவில்லை. எனவே, இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

click me!