ஆளுநரால் எச்சரிக்கப்பட்டாரா மம்தா பானர்ஜி.. பதவியேற்பு விழா மேடையில் பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 1:28 PM IST
Highlights

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு மேடையிலேயே அம்மாநில ஆளுநர்  மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது அரங்கேறிவரும் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டுமென மம்தாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு மேடையிலேயே அம்மாநில ஆளுநர்  மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது அரங்கேறிவரும் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டுமென மம்தாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சுமார் 213 சட்டமன்ற தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. 

தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார், மம்தா பானர்ஜி பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்றது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான அழைப்பாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. மம்தா முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இன்று மாலை அவர் அமைச்சரவையை அறிவிக்க உள்ளார்.  முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

தேர்தல் முடிவுக்கு பின்னர் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரையில் அம்மாநிலத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருணாமுல் காங்கிரஸ் தொண்டர்களே தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் பதவியேற்பு விழா மேடையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆளுநர் ஜெகதீப் தங்கர் சில நிமிடங்கள் தனியாக உரையாடினார். இது அந்த இடத்தில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை வெறியாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநர்  ஜெகதீப் தங்கர் மம்தாவிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சில ஊடகங்கள் ஆளுநர் மம்தாவை எச்சரித்ததாக செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனால் முதல்வர் மம்தா ஆளுநரால் எச்சரிக்கப்பட்டாரா என அம்மாநில மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 

click me!