அந்த விஷயத்துக்கு நீங்க லாயக்கு இல்ல... ராகுல் காந்தி மீது மம்தா பானர்ஜி கட்சி கடும் தாக்கு..!

Published : Sep 18, 2021, 05:02 PM IST
அந்த விஷயத்துக்கு நீங்க லாயக்கு இல்ல... ராகுல் காந்தி மீது மம்தா பானர்ஜி கட்சி கடும் தாக்கு..!

சுருக்கம்

ராகுலால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

மம்தா பானர்ஜியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜகோ பங்களா என்ற பத்திரிகை வெளியாகி வருகிறது. இந்த பத்திரிகையில் நேற்று வெளியான முதல் பக்க கட்டுரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. 

’பிரதமர் மோடியை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுலை தயார்படுத்த பல தடவை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், ராகுலால் அந்த வாய்ப்புகளில் வெற்றி பெற இயலவில்லை. அவர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டார்.

ராகுலால் ஒரு போதும் பிரதமர் மோடியை எதிர்க்க இயலாது. மோடிக்கு மாற்று சக்தியாக ராகுல் வருவதற்கு வாய்ப்பே இல்லை. மோடியை எதிர்க்கும் ஒரே தலைவராக தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே உள்ளார். ஒட்டு மொத்த நாடும் மம்தாவின் தேசிய அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. மம்தா பானர்ஜியை தேசிய தலைவராக ஏற்க வேண்டும். இதற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் கலந்து பேசி முடிவு செய்யப்படும்’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் பதவிக்கு மம்தா பானர்ஜி தயாராகி வருகிறார் என யூகிக்கப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்