மக்கள் நீதி மையம் கட்சிக்கு என்ன சின்னம் ?  பெயர்  பதிவு செய்யப்பட்டபின் கமல் பேட்டி !!

 
Published : Jun 20, 2018, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மக்கள் நீதி மையம் கட்சிக்கு என்ன சின்னம் ?  பெயர்  பதிவு செய்யப்பட்டபின் கமல் பேட்டி !!

சுருக்கம்

makkal Neethi Maiyam party name registered kamal told

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம்  இன்று பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப்  பேசினார்.

நடிகர் கமல்ஹாசன்  கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி  மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். 



இந்நிலையில் கமல்ஹாசன், தனது கட்சியை முறைப்படி பதிவு செய்ய, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். அதன்படி, கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

ஆனால் இது குறித்து எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று முறையாக பதிவு செய்யப்பட்டது.

இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற கமல்ஹாசன், காலை 11 மணியளவில், அவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திந்தித்துப்  பேசினார். கட்சியின் சட்டதிட்டங்கள், நோக்கம், சின்னம், கொடி போன்றவை குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமாரிடம் கமல் விளக்கி பேசினார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கட்சியில் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். கட்சியின் சின்னம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கமல் கூறினார்.

இதைத் தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் இன்று சந்திப்பார் என தெரிகிறது.  இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஒன்பது நாட்களாக டெல்லி துணை நிலை ஆளுனர் அலுவலகத்தில் நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை நேற்றுடன் நிறுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி