
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரது மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கப் பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து, மக்கள் சக்தி கட்சியின் ரவி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததால்தான் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஜெயசந்திரன், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.
டிடிவி தினகரன் மீதான வழக்கு தொடர முகாந்திரமில்லை என்று கூறி சுயேட்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.