மக்கள் நீதி மய்யத்தின் மேலும் ஒரு முக்கிய வேட்பாளருக்கு கொரோனா... அதிர்ச்சியில் கமல் ஹாசன்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 22, 2021, 10:23 AM IST
Highlights

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மற்றும் தொண்டர்கள் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் ஆயிரத்தை கடந்து பதிவாகிக்கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரை, பொதுக்கூட்டம், வாக்கு சேகரிப்பு என எங்கு நோக்கிலும் மக்கள்கூட்டம் அலைமோதுவதாலும், முகக்கவசம் அணியாமல் மக்கள் காட்டும் அலட்சியமும்  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

பள்ளி, கல்லூரிகளைத் தொடர்ந்து தற்போது தேர்தல் களத்திற்குள்ளும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  கடந்த  18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.   மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்த அடுத்து இருதினங்களிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சந்தோஷ் பாபு, ‘எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வேளச்சேரி தொகுதி மக்களிடம் தெரிவித்து கொள்கிறேன். நான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானவன். உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாம் டிஜிட்டல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். எங்களது கட்சியினர் உங்களை வந்து சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் வாக்களியுங்கள்’ என பதிவிட்டிருந்தார். 

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மற்றும் தொண்டர்கள் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. சென்னை அண்ணா நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளருமான பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருதினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற   மக்கள் நீதி மயய்ம் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமலுடன் இணைந்து பொன்ராஜும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!