சென்னையில் 3 தொகுதிகள்..! வெற்றியை தீர்மானிக்கப்போகும் குஜராத்தி, ராஜஸ்தானிஸ்..! அதிர்ச்சியில் திமுக..!

By Selva KathirFirst Published Mar 22, 2021, 9:54 AM IST
Highlights

சென்னையில் துறைமுகம், எழும்பூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவில் வட இந்தியர்களின் வாக்குகள் இருப்பது தொடர்பான கருத்து கணிப்பு திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னையில் துறைமுகம், எழும்பூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவில் வட இந்தியர்களின் வாக்குகள் இருப்பது தொடர்பான கருத்து கணிப்பு திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் திமுகவின் இந்தி ஒழிக போடா என்கிற முழக்கம் அவர்களின் வேட்பாளர்களுக்கு ஆப்பாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வட இந்தியர்கள் அதிலும் குறிப்பாக ராஸ்தான், குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளாக துறைமுகம், எழும்பூர் மற்றும் பெரம்பூர் உள்ளது. இந்த தொகுதிகளில் துறைமுகம் தொகுதியில் மட்டும் குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த சென்னையில் வாக்குரிமை கொண்ட 30 ஆயிரம் பேர் உள்ளனர். இதே போல் எழும்பூர் தொகுதியில் மட்டும் வாக்குரிமை கொண்ட வட இந்தியர்கள் 20 ஆயிரம் பேரும், பெரம்பூர் தொகுதியில் சுமார் 17ஆயிரம் வட இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.

கடந்த 2009ம் ஆண்டு வரை சென்னையில் உள்ள வட இந்தியர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சென்னையில் சுறுசுறுப்பாக இயங்கும் வட இந்திய இளைஞர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியால் சென்னையில் நீண்ட காலமாக வசிக்கும் வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். கடந்த 2011 தேர்தல், 2014 தேர்தல், 2016 தேர்தல், 2019 தேர்தல் வரை இவர்கள் தவறாமல் சென்று வாக்களித்து வந்துள்ளனர். சென்னையில் 16 தொகுதிகள் உள்ள நிலையில் துறைமுகம் தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து பிடிவாதம் பிடித்து வாங்கியுள்ளது பாஜக.

துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார். இவர் பாஜக மாநில இளைஞர் அணித் தலைவர். இதற்கு காரணம் துறைமுகம் தொகுதியில் உள்ள வட இந்தியர்களின் வாக்குகள் தான் என்கிறார்கள். சென்னையில் உள்ள வட இந்தியர்கள் மத்தியில் திமுக என்றால் ஒருவித அச்சம் உள்ளது. அதே போல் மோடி மீது அவர்களுக்கு அளவில்லாத பாசம் உள்ளது. மோடியைத்தான் சென்னையில் உள்ள வட இந்தியர்கள் தங்கள் தலைவராக கருதுகிறார்கள். எனவே துறைமுகம் தொகுதியில் உள்ள சுமார் 30ஆயிரம் வட இந்தியர் வாக்குகளை பாஜக சிந்தாமல் சிதறாமல் பெற்றுவிடும் என்கிறார்கள்.

இதே போல் அதிமுக – பாஜக கூட்டணியில் எழும்பூரில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவர் ஜான் பாண்டியனுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை அந்த தொகுதியில் வாழும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திகள் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தான் ரிச்சி ஸ்ட்ரீட் வருகிறது. அந்த தெரு முழுக்க முழுக்க வட இந்தியர்களால் நிரம்பியது. அந்த பகுதியில் தற்போது முதலே ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் ஈடுபடுவதை காண முடிகிறது. திமுக இந்திக்கு எதிரான கட்சியாக இருப்பதாலும், இந்து மதத்தை கடுமையாக விமர்சிப்பதாலும் எழும்பூரில் உள்ள வட இந்திய வாக்காளர்கள் சுமார் 20 ஆயிரம் பேரும் ஜான் பாண்டியனை ஆதரிப்பார்கள் என்கிறார்கள் அவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

அதே சமயம் எழும்பூர் வாக்காளர்களில் சுமார் 10 சதவீதத்தினர் வெளிமாநில வாக்காளர்கள் என்கிறார்கள். இவர்களின் வாக்கு நிச்சயமாக திமுக வேட்பாளர் பரந்தாமானுக்கு கிடைக்காது என்கிறார்கள். எனவே வட இந்திய வாக்காளர்களை குறி வைத்து தற்போது முதலே ஜான் பாண்டியன் தரப்பு காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இதே போல் சென்னை பெரம்பூர் தொகுதியில் சுமார் 17ஆயிரம் வெளிமாநில வாக்காளர்கள்உள்ளனர். இவர்களும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் தனபாலனை ஆதரிப்பார்கள் என்கிறார்கள். இதற்காக பெரம்பூர் மற்றும் எழும்பூர் தொகுதியில் வட இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மட்டும் பாஜகவினை கையோடு பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

click me!