தொண்டாமுத்தூர் தேர்தல் போட்டியிலிருந்து விலக நடிகர் மன்சூர் அலிகான் திடீர் முடிவு... திகுதிகு பின்னணி..!

By Asianet TamilFirst Published Mar 22, 2021, 8:48 AM IST
Highlights

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான், போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திமுக சார்பில் கார்த்திகேய சேனாபதி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகானும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் பாணியில் பிரசாரம் செய்து வந்தார். நேற்று காலை வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவர், இரவில் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், “நான் பணம் வாங்கிக்கொண்டு போட்டியிடுவதாக பலரும் பேசுகிறார்கள். தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் கெட்ட பெயர் எடுப்பதற்குப் பதிலாக போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து விட்டேன். எனவே, வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளேன். இந்த முடிவு மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன. இந்தத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர் மாற்றப்பட்டு ஷாஜகான் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் மாற்றப்பட்டதற்கும் இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெற்று அதிமுகவின் வெற்றிக்கு உதவுவதாக மக்கள் நீதி மய்யம் மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேபோன்ற விமர்சனம் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும் வைக்கப்பட்டதால், அவர் போட்டியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

click me!