பள்ளிகளில் யோகா பயிற்சிகளை கட்டாயமாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

By Velmurugan s  |  First Published Jun 21, 2023, 12:35 PM IST

தமிழகத்தில் பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கும், யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Latest Videos

அதன் ஒரு பகுதியாக  பா.ஜ.க வினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி கோவையில் பெரியகுளம் அருகே பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பா.ஜ.க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.

ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்; போஸ்டர் ஒட்டி திமுக நிர்வாகி மிரட்டல்

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறுகையில், பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்று உள்ளது. உலக நாடுகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றந. இதன் மூலம் லட்சக் கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கை தரம் உயர்ந்து வருகின்றது. 

ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்

உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது. கோவை மாநகராட்சி நிர்வாகம், பூங்காகளில் யோகா செய்வதற்கான தனி  இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். தமிழ்நாடு அரசு யோகா பயிற்சிகளை பள்ளிகளில்  கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்மந்தமான விசயம் கிடையாது. ஆரோக்கியம் தொடர்பானது. யோகா செய்வதால் மாணவர்கள் மன அழுத்தம், வழி தவறி செல்வது போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா  கட்டாயமாக்க பட  வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகச்சை நடந்து  பூரண குணமாகி வரவேண்டும். மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் அதை தான் நினைப்பார்கள் என்றார்.

click me!