இனிமே தான் ஆளும்கட்சிக்கு இருக்கு.. கிழித்து தொங்கவிடுவேன்.. ஜாமீனில் வெளிவந்த எஸ்.ஜி.சூர்யா ஆவேசம்..!

By vinoth kumar  |  First Published Jun 21, 2023, 11:58 AM IST

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான  எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான  எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து டுவிட்டரில் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில் கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் எஸ்.ஜி சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் எஸ்.ஜி. சூர்யா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீலாபானு  எஸ்.ஜி. சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். 30 நாட்கள் தினமும் காலை 10 மணிக்கு மதுரை சைபர் கிரைம் போலீஸில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். 

இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  எஸ்.ஜி.சூர்யா;- ஆளும்கட்சிக்கு இனிமே தான் இருக்கிறது. கிழித்து தொங்கவிடுவேன் என ஆவேசமாக பேசினார். 

click me!