பட்டியல் இனத்துறையை செயல்படும் துறையாக மாற்றுங்கள்.. தலைமைச் செயலாளருக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் வேண்டுகோள்.

By Ezhilarasan BabuFirst Published May 20, 2021, 3:23 PM IST
Highlights

ஆதி நலப்பள்ளிகளில் மாணவச் சேர்க்கை 60% சரிந்துள்ளது. Post matric கல்விக் கொடைக்கு, திரு.சண்முகம் நிதிச் செயலராகவும், தலைமைச் செயலராகவும் இருந்த 2011ம் ஆண்டிலிருந்து, அந்தந்த ஆண்டிற்கான budget estimate தொகை அந்தந்த ஆண்டு budget ல் வழங்கப்படவேயில்லை.

ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி  தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இறையன்பு அவர்களுக்கு, வாழ்த்துக்கள்! 2000 இலிருந்து 20 ஆண்டுகளில் எட்டு பிராமணர்கள் தலைமைச் செயலராக இருந்துள்ள ஒரு போக்கு உங்களால் தோற்றுப் போனது. பெருத்த மகிழ்ச்சி. திரு. திரவியத்திற்குப் பிறகு தமிழாய்ந்த ஒருவர் தலைமைச் செயலராய் வந்திருப்பது இன்னொரு சிறப்பு. உங்களது காலத்தில் பட்டியல் இனத்துறை ஏற்றத்துடனும் சுயத்துடனும் செயல்பட ஆவன செய்ய வேண்டுகிறோம். 

தங்களின் தலைமைச் செயலர் காலகட்டத்தில் பட்டியல் இனத்துறையைச் செயல்படும் துறையாக இயக்கத் தங்களை வேண்டிக் கொள்கிறோம்.
கடந்த இருபது ஆண்டு காலத்தில்; 1. பட்டியல் இனத்தறையில் புதுத் திட்டங்களே உருவாக்கப்படவில்லை. 

2. ரூ.15000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ள பட்டியல் இனத் துணைத் திட்டத்தை வடிவமைப்பதில், பட்டியல் இனத்துறை அமைச்சருக்கும், செயலருக்கும் சுதந்திரம் அளிக்கப்படவில்லை, அவர்களும் சுய சிந்தனையுடன் செயல்படவில்லை. 

3. புதிய திட்டங்கள் ஏதும் கொண்டு வரப்படவில்லை என்பதோடு, நில எடுப்பு, வீட்டு மனை வழங்குதல், சமத்துவபுரம், 10-12 வகுப்புத் தலை மாணாக்கர்க்குப் பரிசு போன்ற பல நல்ல திட்டங்கள் கைவிடப்பட்டன. ஆதி நலப்பள்ளிகளில் மாணவச் சேர்க்கை 60% சரிந்துள்ளது.

 4. Post matric கல்விக் கொடைக்கு, திரு.சண்முகம் நிதிச் செயலராகவும், தலைமைச் செயலராகவும் இருந்த 2011ம் ஆண்டிலிருந்து, அந்தந்த ஆண்டிற்கான budget estimate தொகை அந்தந்த ஆண்டு budget ல் வழங்கப்படவேயில்லை. 

5. திரு.சண்முகம் பணியில் இருந்த வரையில் post matric கல்விக் கொடை வழங்கப்படுவதைத் தடுத்து வந்தார். (அஆ 51-52). இந்தச் சண்முகத் தடை இன்னும் நீடிக்கிறது. இன்னும் சில உள்ளன. இவ்வளவில் உங்கள் நாட்டத்தை ஈர்க்க விழைகிறோம். பட்டியல் இனத்துறை இன்னும் பரிமளிக்கத் தங்களது பங்களிப்பை வேண்டுகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!