#BREAKING தமிழகத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க குழு அமைப்பு... அரசாணை வெளியீடு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 20, 2021, 3:17 PM IST
Highlights

தமிழகத்தில் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து கண்காணிக்க சிறப்பு பணிக்குழு அமைக்கபப்ட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை சரி செய்ய தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்டம் தோறும் கொரோனா சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

தமிழகத்தில் ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி பெல் நிறுனத்திலும் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து கண்காணிக்க சிறப்பு பணிக்குழு அமைக்கபப்ட்டுள்ளது. 


மாநிலங்களில் குழு அமைத்து ஆக்ஸிஜன் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரி தாரேஸ் அகமது தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில் மத்திய ஊரக வளர்சித்துறை செயலாளர், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த துறை தலைவர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மருத்துவ ஆக்ஸிஜனை ஒதுக்கீடு செய்வது, விநியோகிப்பது ஆகிய பணிகளை இந்த குழு கண்காணிக்க உள்ளது. 
 

tags
click me!